Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதிக்கும் அதிகபட்சம் - 4 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :

புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதிக்கும் அதிகபட்சமாக 4 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு கல்லூரி மையத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு அதிகாரி சுதாகர் நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 23 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும். இவைகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 8, 8, 7 என்ற வகையில், தனித்தனி தொகுதிகளாகப் பிரித்து கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றி எண்ணப்படும். முதல் 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கும். அதன் எண்ணிக்கை முடிந்தவுடன் அடுத்த 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பிறகு மீதமுள்ள 7 தொகுதிகளின் எண்ணிக்கை நடைபெறும். இந்த முறை உரிய இடைவெளி இருப்பதற்காக, வாக்கு எண்ணிக்கைக்கு 7 மேஜைகளுக்குப் பதில், 5 மேஜைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 4 சுற்று என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x