Published : 02 May 2021 03:14 am

Updated : 02 May 2021 03:14 am

 

Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு :

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது ஆட்சியர் தெரிவித்தது: அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தலா 14 மேசைகள் மூலம் 27 சுற்றுகளில் எண்ணப்படுகின்றன.


வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கணினி முறையில் சுழற்சி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், ஊடகத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்று சமர்ப்பித்த பின்பே அனுமதிக்கப்படுவர். நிகழ்வுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் 400 போலீஸார் மற்றும் 72 மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் 600 போலீஸார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x