

கரூர் திருமாநிலையூர் அக்ரஹாரம் ராமபஜனை மடத்தில் ராம உத்சவ கமிட்டி சார்பில் ராமநவமி மஹோற்சவம் கடந்த ஏப்.21-ம் தேதி தொடங்கியது. முன்னதாக ஏப்.20-ம் தேதி ஸ்தம்ப ஸ்தாபனம் நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் சகஸ்ரநாம அர்ச்சனை, திவ்யநாம பஜனை நடைபெற்று வருகிறது. சீதா திருக்கல்யாண மகோற்சவம் நேற்று நடைபெற்றது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சீதா உருவப்படத்துக்கு திருமாங்கல்யம் பூட்டப்பட்டது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.