புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குறை தீர்க்க கட்டுப்பாட்டு அறை :

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்  குறை தீர்க்க கட்டுப்பாட்டு அறை :
Updated on
1 min read

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைப் போக்குவதற்கு மாவட்டஅளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தா.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்கும் பொருட்டும், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யவும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை திருநெல்வேலி தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) கைபேசிஎண் 99657 11725 மற்றும் திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கைபேசி எண்கள் 90036 93126 மற்றும் 97514 58266 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம்.

தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கைபேசி எண்கள் 72009 58244, 99441 17426, 98408 49802 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in