Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய - அலுவலகங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறை :

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் உள்ளவர்கள் கரோனா தொற்றுநோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும்,நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைப் படுத்தியுள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளிக்கவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்மையத்தின் தொலைபேசி எண்கள்- 04633-290548அல்லது 1077. கரோனா தொற்றுதொடர்பான விவரங்களுக்கு 04633-281100, 04633-281102,04633-281105 ஆகியவற்றில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மாவட்டத்திலுள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியஅலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிஎண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள் விவரம்:

தென்காசி நகராட்சி அலுவலகம்- 04633-222228, சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம்- 04636 224719, கடையநல்லூர் நகராட்சி அலுவலகம்- 04633 240250, செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04633 233058, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04633 250223, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04636 241327, குருவிகுளம்ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-9442584129, மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்-04636 290384, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- 04633 270124, கடையம் ஊராட்சி ஒன்றியஅலுவலகம்- 04634 240428.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x