

உதகை அருகேயுள்ளது டி.ஆர்.பஜார். இப்பகுதிக்கு செல்லும் சாலையை சிலர் மறித்தும், ஆணிகளை பதித்தும் மக்கள் பயன்படுத்த முடியாதபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வனத்துறை அதிகாரிகளும் உடந்தை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பைக்காரா வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்நடத்தினர். அதன்பின்பு தமிழ்நாடு விவசாய சங்கஉதகை தாலுகா கமிட்டிஉறுப்பினர் ராஜேந்திரன் கூறும்போது ‘‘டி.ஆர்.பஜார் பகுதிக்கான சாலையைசீரமைத்துத்தர வேண்டும். வன விலங்குகளால் கால்நடைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதோடு, உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வனத்துறை வழங்க வேண்டும்’’என்றார்.