Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

வீடு வீடாக கரோனா கண்காணிப்புக் குழு தொடக்கம் :

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில்வீட்டுக்கு வீடு கரோனா கண்காணிப்பை மேற்கொள்ளும் குழுவினை சுகாதார செயலாளர் அருண் நேற்று தொடங்கி வைத்தார். இக்குழு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, பரிசோதனை செய்து, அவர்கள் வீட்டில் தங்கலாமா அல்லது மருத்துவமனையில் தங்க வேண்டுமா என முடிவு செய்வர். இதற்கென 30 சிறப்புப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்புக் குழுவை தொடங்கி வைத்த பிறகு சுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தயவுசெய்து உங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். மருத்துவக் குழு உங்களது வீடு தேடி வருவர்.கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், கண்டிப்பாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கரோனா பரிசோதனை செய்து கொண்ட பிறகு, பரிசோதனை முடிவு வரும் வரை அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாசனை தெரியாமல் இருப்பது, சுவை தெரியாமல் இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம் என ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருந்தால் மக்கள் அனைவரும் 104 என்ற சேவை எண்ணை தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x