

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அதிக பட்சமாக 30 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் 2673 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் திண்டுக்கல் அருகேயுள்ள அண்ணா பல் கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. தபால் வாக்குகளை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கரோனா பரிசோதனை
வாக்கு எண்ணும் மையத் தில் இறுதிக்கட்ட பணியாக தொகுதிவாரியாக வாக்கு எண்ணும் மேஜைகள், தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து முடிந்தநிலையில், ஒவ்வொரு தொகுதி தேர்தல் அலுவலருக்கும் கம்ப்யூட்டர், பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரம், இணையதள வசதி ஆகியவை பொருத்தும் பணி நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு உள்ள இயந்திரங்கள் உள்ள அறைகளின் ‘சீல்' அனைத்து கட்சியினரின் முன்னிலையில் அகற்றப்பட்டு உள்ளே இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூத் வாரியாக கொண்டுவரப்பட்டு எண்ணப் படவுள்ளன.
திண்டுக்கல், பழநி, நத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் தனித் தனியே 29 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. ஆத் தூர் தொகுதி வாக்குகள் அதிகபட்சமாக 30 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன.
ஒட்டன்சத்திரம் தொகுதி வாக்குகள் 26 சுற்றுகளிலும், வேடசந்தூர் தொகுதி 27 சுற்றுகளிலும், நிலக்கோட்டை தொகுதி வாக்குகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன.