

சேலத்தில் இன்றும் (1-ம் தேதி), நாளையும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், நேற்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மட்டன் மற்றும் சிக்கன், மீன் வாங்க மக்கள்கூட்டம் அதிகரித்து இருந்தது. சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட், பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மீன் மார்க்கெட்,குகை பாலம் இறைச்சிக் கடைகள் மற்றும் மாநகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சிக் கடைகளிலும், மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
வழக்கத்தை விட கூட்டம் அதிகம் இருந்தபோதும் மக்கள்சமூக இடைவெளி பின்பற்றா மலும், முகக் கவசம் அணியா மலும் திரண்டனர். வரும் நாட்களில் இதுபோன்ற நாட்களில் அதிகாரிகள் கரோனா விதிமுறை களை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்து, மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.