

ஈரோடு மாவட்டத்தில் கரோனாதொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தஆண்டில் முதல் முறையாகநேற்று 500-க்கும் மேற்பட்டவர் களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 519 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தொற்று காரணமாக சிகிச்சை பெற்றவர்களில் 277 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சேர்ந்த 75 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.