Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் - வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் :

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளுக் கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில்திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தனித்தனியாக திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. துணை ராணுவ படையினர், தமிழ்நாடு சிறப்பு போலீஸார், உள்ளூர் போலீஸார் என்று 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வாக்கு எண்ணும் மையம் உள்ளது

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை செய்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகிலுள்ள அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. இதற்காக அங்கு மேஜைகள் போடப்பட்டு, தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்துக் குள் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் செல்ல தனியாகபாதைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் துணை ராணுவப் படையினர், உள்ளூர் போலீஸார், ஆயுதப்படை போலீஸார், ஊர்க் காவல்படையினர் என்று 500-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நுழைவாயிலில் வெடிகுண்டு நிபுணர்கள்,மோப்பநாய் உதவியுடன் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் பொறியியல் கல்லூரி வழியாக போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

இதனிடையே திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள 130 நுண்பார் வையாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் வே. விஷ்ணு தலைமைவகித்தார். தேர்தல் பொதுபார்வையாளர்கள் சுரேந்திர நாராயண பாண்டே, நூன்சவாத் திருமலை நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய5 சட்டப்பேரவைத் தொகுதிகள்உள்ளன.

இந்த தொகுதிகளில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி கல்லூரியில் 5பாதுகாப்பு அறைகளில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.

நாளை (2-ம் தேதி) காலை வாக்குஎண்ணும் பணி தொடங்கு கிறது. இப்பணியில் 650 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைவரும் 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அல்லது கரோனா தொற்று இல்லை என்பதற்கு பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மையத்துக்குள் செல்ல அனுமதி கிடையாது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணி வீடியோவில் பதிவுசெய்யப்படும். வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் கூறினர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மக்களவை தொகுதிமற்றும் 6 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண் ணிக்கை கோணம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி வாக்கு எண்ணும் மையம் மற்றும்அதைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நாளில் முழு ஊரடங்கு என்பதால், மையத்துக்கு வெளியே கட்சியி னர், தொண்டர்கள் யாரும் அனு மதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x