

உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பாக, பழையகாயல் கிராமத்தில் 45 நாட்களாக சணல் பொருட்கள்தயாரிப்பு, டேலி பயிற்சி, இலக்கணப்பயிற்சி, தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிகளில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கல்லூரி இயற்பியல் துறை தலைவர் அருட் சகோதரி ஜெசி பெர்னாண்டோதலைமை வகித்தார். அருட் சகோதரிலிசா வாழ்த்தி பேசினார். சமுக மேம்பாட்டுதிட்ட ஒருங்கிணைப்பாளர் அருட் சகோதரி குழந்தைதிரேஸ், பழைய காயல் பங்குத் தந்தை அமலன்,கவுன்சிலர் செல்வக்குமார் ஆகியோர் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.