Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 2 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை : 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவான 16,31,918 வாக்குகள் 2 மையங்களில் நாளை (2-ம் தேதி) எண்ணப்படவுள்ளன.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,10,359 ஆண்களும், 1,11,442 பெண்களும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2,21,803 பேர் (80.67 சதவீதம்) வாக்களித்தனர். திருவண்ணா மலை சட்டப்பேரவைத் தொகுதி யில் 1,00,227 ஆண்களும், 1,05,284 பெண்களும், 10 மூன்றாம் பாலினத் தவர்களும் என 2,05,521 பேர்(71.77 சதவீதம்) வாக்களித்தனர்.

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 98,606 ஆண்களும், 1,02,353 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் என 2,00,959 பேர் (79.40 சதவீதம்) வாக்களித்தனர். கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 95,841 ஆண்களும், 97,655 பெண்களும் என மொத்தம் 1,93,496 பேர் (79.69 சதவீதம்) வாக்களித் துள்ளனர். போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 95,231 ஆண்களும், 98,312 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 1,93,546 பேர் (79.38 சதவீதம்) வாக்களித் துள்ளனர்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,08,477 ஆண்களும், 1,12,051 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,20,531 பேர் (79.88 சதவீதம்) வாக்களித்துள்ளனர். செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 1,06,243 ஆண்களும், 1,05,888 பெண்களும் என மொத்தம் 2,12,131 பேர் (81.67 சதவீதம்) வாக் களித்துள்ளனர். வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதியில் 92,458 ஆண்களும், 91,473 பெண்களும் என மொத்தம் 1,83,931 பேர் (76.47 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியிலும் 10,17,322 ஆண் வாக்காளர்களில் 8,07,442 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 79.37 ஆகும். மேலும், 10,60,026 பெண் வாக்காளர்களில் 8,24,458 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 77.77 ஆகும்.

இதேபோல், 92 மூன்றாம் பாலினத்தவர்களில் 19 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 20,77,440 வாக்காளர்களில் 16,31,918 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சதவீதம் 78.55 ஆகும்.

முதலில் தபால் வாக்குகள்

திருவண்ணாமலை, கலசப் பாக்கம், கீழ்பென்னாத்தூர் மற்றும் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள், திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எண்ணப் படவுள்ளன.

இதேபோல், ஆரணி, வந்தவாசி, போளூர் மற்றும் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஆரணி அடுத்த தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் எண்ணப் படவுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி நாளை (2-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் 500, 500-ஆக பிரிக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. இதையடுத்து. மின்னணு இயந் திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

20 முதல் 30 சுற்றுகள்

சீலிடப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடத்தும் அலு வலர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன. 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. சுமார் 20 முதல் 30 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணும் பணி நடைபெறலாம் என கூறப்படுகிறது. காலை 10 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள், செய்திகளை சேகரிக்கும் ஊடகத் துறையினர் ஆகியோர் கரோனா பரிசோதனை சான்று அல்லது 2 முறை போடப்பட்ட கரோனா தடுப்பூசி சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அவர்களில், 100-க்கும் மேற் பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வெளி பகுதியில் உள்ளூர் காவல் துறையைச் சேர்ந்தவர்களும், உள் பகுதியில் சிறப்பு காவல் துறையினரும், வாக்கு எண்ணும் இடம் மற்றும் மின்னணு இயந்திரம் வைக் கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை ராணுவ படையைச் சேர்ந்தவர்களும் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர். கரோனா பரி சோதனை சான்று அல்லது 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று, அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித் தால் மட்டுமே, உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டம் கிடையாது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையையொட்டி வெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித் துள்ளது. அதேபோல், வெற்றியை அமைதியாக கொண்டாட வேண் டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் வெற்றி கொண் டாட்டங்களை தடுக்க பிரதான சாலைகளில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத் தப்படவுள்ளனர்.

மேலும், சனிக்கிழமை இரவு (இன்று) 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x