பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.1 லட்சம் அபராதம் :

பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.1 லட்சம் அபராதம் :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி 4 மண்டலங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.16,600, தடை செய்யப்பட்ட சுமார் 40 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமாக ரூ.89,550 என ரூ.1 லட்சத்து 6,150 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in