

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழனன்று நடைபெறும் மாட்டுச்சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது கரோனா பரவல் காரணமாக, வெளிமாநில வியாபாரிகள் இங்கு வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும் நேற்று நடைபெற இருந்த மாட்டுச்சந்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து ஏற்கெனவே வியாபாரிகளுக்கு மாட்டுச்சந்தை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வியாழக்கிழமை வழக்கம்போல் மாட்டு சந்தை செயல்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.