

காஞ்சிபுரம் ஐய்யங்கார் குளம்தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று தடுப்புமையத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் 5,000 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் 300-ல் இருந்து 400 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோயாளிகள் பராமரிப்பு சிறப்பு மையத்தை தொடங்குவதற்கு தேவைப்படும் ஏற்பாடுகளை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் விரைவாக செய்ய, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
400 பேர் தங்கலாம்