

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் என பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த 101 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவர்களில் 18 பேர் 45 வயதுக்கு குறைவானவர்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் பாராட்டினார்.