திருப்பத்தூர் அருகே மஞ்சு விரட்டுக்கு தடை விதித்த அதிகாரிகள் :

திருப்பத்தூர் அருகே மஞ்சு விரட்டுக்கு   தடை விதித்த அதிகாரிகள் :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கரோனா பரவலால் மஞ்சு விரட்டுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் தடை விதித்தனர்.

திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறும்.

கரோனா பரவல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தடை விதித்தார். இந்நிலையில் ஏப்.29 (இன்று) கண்டரமாணிக்கத்தில் மஞ்சு விரட்டு நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து கரோனா பரவலால் மஞ்சு விரட்டுக்கு அனுமதி இல்லை. மேலும் வதந்தியை நம்ப வேண்டாம். மீறி மஞ்சு விரட்டு நடத்தினால், மாடுகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறை, காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in