உ.வே.சா நினைவு நாள் அனுசரிப்பு :

உ.வே.சா நினைவு நாள் அனுசரிப்பு  :
Updated on
1 min read

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் நினைவு நாளை முன்னிட்டு தமிழி எழுத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கிய கையெழுத்து பிரதிகள் படைய லிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உ.வே.சா நினைவு நாளை முன்னிட்டு கரூர் ஜவஹர் பஜார் காமராஜ் சிலை அருகே உ.வே.சாமிநாத அய்யரின் உருவப்படம் வைக்கப்பட்டு சேவா பாரதி அமைப்பின் கரூர் மாவட்டத் தலைவர் சேஷாத்ரி, முன்னாள் ராணுவத்தினர் சார்பில் பரதன், வேலுசாமி, ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் நேற்று மரியாதை செலுத்தினர்.

கரூர் பரணி பார்க் பள்ளி அலுவலகத்தில் உ.வே.சா உருவப்படத்துக்கு பரணி பார்க் கல்வி குழுமங்களின் மூத்த முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழி எழுத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களின் கையெழுத்து பிரதிகளை படையலிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், வெள்ளியணை அரசுப் பள்ளி ஆசிரியர் மனோகர், ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in