சேலம் மாநகராட்சி சார்பில் - கரோனா ஆலோசனை மையம் :

சேலம் மாநகராட்சி சார்பில் -  கரோனா ஆலோசனை மையம் :
Updated on
1 min read

கரோனா சிகிச்சை அளிக்கும் மையங்களில் உள்ள படுக்கை வசதி விவரங்கள், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை மக்கள் அறிய சேலம் மாநகராட்சி சார்பில் கரோனா தொலைத் தொடர்பு ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும், சிலர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர் கள் சிகிச்சை பெற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தற்காலிக சிகிச்சை மையம் ஆகிய இடங்களில், சிகிச்சைக்கான படுக்கை வசதி விவரங்களை தொலைபேசி மூலம் அறிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கரோனா தொலைத் தொடர்பு ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை 0427-2212963 மற்றும் 0427 2212964 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கரோனா சிகிச்சை படுக்கை வசதி எங்கு உள்ளது என்ற விவரம் மற்றும் கரோனா தொற்று, அதற்கான சிகிச்சை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுகொள்ளலாம்.

சேலம் மாநகராட்சி பகுதியில் தினமும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மற்றும் சிறப்பு சளி தடவல் பரிசோதனை மையங்கள் நடைபெறும் இடங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in