நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது :

நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் பெரியமணலியைச் சேர்ந்த குமரவேல் என்பவரது மகள் சுகந்தி (34). திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி செல்வி (34). இவர்கள் இருவரும் தோழிகள். இருவரும் பரமத்தி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, செல்விக்கு ஏற்கெ னவே அறிமுகமான நல்லூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்த சாரதி (36), அவரது நண்பர்கள் மணிகண்டன் (31), பிரகாஷ் (36) ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளனர்.

அதன்பின், தனது காரில் இரு பெண்களையும் சாரதியும், அவரது நண்பர்களும் திண்டுக்கல் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மீண்டும் பரமத்தி திரும்பிபோது, சுகந்தி மற்றும் செல்வியிடம் இருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு அவர்களை இறங்கி விட்டு தப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக சுகந்தி பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, சாரதி, மணிகண்டன், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பரமத்தியில் கிளை சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in