கரோனா பரவலை தடுக்க : திருவள்ளூர் மாவட்டத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம் :

கரோனா பரவலை தடுக்க  : திருவள்ளூர் மாவட்டத்தில் அவசர கட்டுப்பாட்டு மையம்  :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் கரோனா தொற்று தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விவரங்களுக்கு 044 27666746, 044 27664177ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் 9444317862 என்ற வாட்ஸ்-ஆப் எண் வாயிலாக தொடர்புக் கொண்டு பயனடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in