

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பாவடி மைதானம் அருகே உள்ள மன்சூர் என்பவரின் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் காரைக்குடி அருகே கண்டனூரைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமன் (23), அதே ஊரைச் சேர்ந்த ராமன் மகன் அனந்தன் (23) ஆகியோர் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ராமன் உயிரிழந்தார். படுகாயமடைந்த அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.