ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் - முதுகுளத்தூர் நீதிபதியின் தாயார் :

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் -  முதுகுளத்தூர் நீதிபதியின் தாயார் :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சார்பு-நீதிபதியின் தாயார், நீதிபதியின் குழந்தை ஆகியோருக்கு காய்ச்சல், சளித் தொந்தரவு இருந்தது. இவர்களை சுகாதாரத் துறையினர் பரிசோதித்தபோது கரோனா தொற்றுக்கான அறிகுறி தெரிய வந்தது. இதையடுத்து தாயாரும், குழந்தையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் நேற்று சேர்க்கப்பட்டனர்.

நீதிபதியின் தாயாரை ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்து ஸ்கேன் எடுத்தனர். மீண்டும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அங்கு ஸ்ட்ரெச்சர் இல்லை. இது குறித்து மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் சார்பு-நீதிபதி முறையிட்டார். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, 71 வயதான தாயாருடன் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு நடந்து சென்றார். புறநோயாளிகள் பிரிவு அருகே வந்தபோது அவரது தாயாருக்கு மயக்கம் ஏற்பட்டது.

பின்னர், ஸ்ட்ரெச்சர் கிடைக்காமல் காத்திருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அவரது தலையீட்டைத் தொடர்ந்து உடனடியாக ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு சார்பு-நீதிபதியின் தாயார் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in