Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
புதுக்கோட்டை அருகே நடந்த கொலை வழக்கில் நீதிமன்றத் தில் ஆஜரான தம்பியை அழைத்து சென்ற அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். படுகா யங்களுடன் தப்பிய அவரது தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி அருகே கூத்தாடிவயல் ஏரியில் பொக்லைன் இயந்தி ரங்களைக் கொண்டு கடந்த 2019-ல் சவுடுமண் அள்ளப்பட்டது.
அங்கு, வாகனங்களை இயக்கும் பணியில் தூக்குக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(23), திண்டுக்கல் மாவட்டம் பேயம்பட் டியைச் சேர்ந்த சின்னையா மகன் முத்துராஜா(31), சாணார் பட்டியைச் சேர்ந்த செல்லாண்டி மகன் கருப்ப சாமி(28), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வளையங்குளத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் பொன்னையா(22) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2019 மார்ச் 18-ம் தேதி, செல்போனை ஓசி தர மறுத்த தகராறில், இசக்கிமுத்துவை சக பணியாளர்கள் பொக்லைன் இயந்திரத்தால் இடித்து கொலை செய்தனர். இது குறித்து மணமேல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று நடை பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜரான பொன்னையா, தனது மூத்த சகோதரர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, புதுக்கோட்டை குடுமியான்மலை சாலையில் செல்லுகுடி பகுதியில் சென்ற இருவரையும், இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழி மறித்து சரமாரியாக வெட்டினர்.அதில், காயங்களுடன் பொன்னையா தப்பியோடிவிட்டார். படுகாயம் அடைந்த விஜயகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோகர்ணம் போலீஸார் அங்கு சென்று விஜயகுமாரின் சடலைத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும், படுகாயமடநை்த பொன்னையாவை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்தின் முன்விரோதத்தில் பழிக்குப் பழியாக கொலை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சம்பந் தப்பட்ட நபர் தப்பியோடியதால் அவரது அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT