Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

கோடையில் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளதால் : பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அதிகரிப்பு

கோடை வெயிலுக்கு தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளதால் புதுக் கோட்டை மாவட்டத்தில் பிளாஸ் டிக் குடங்கள் விற்பனை அதிகரித் துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குடிநீரின் தேவை அதிகரித்திருப்பதோடு, தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சி னையை தீர்க்கக் கோரி மக்கள் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், தனியார் டேங்கர் லாரிகளில் வரும்போதும், குழாய்களில் வரும்போதும் போதுமான அளவுக்கு குடிநீரை பிடித்து வைத்துக்கொள்வதற்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் குடங்களை வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இத னால், தற்போது பிளாஸ்டிக் குடங் களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியைச் சேர்ந்த சிலர் அங்கிருந்து சுமை ஆட்டோக்களில் ஊர் ஊராகக் சென்று பிளாஸ்டிக் குடங்களை விற்று வருகின்றனர். தினசரி 1,000 குடங்கள் வீதம் விற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பிளாஸ்டிக் குடம் வியாபாரி சாணார்பட்டி சுப்பையா கூறியது: திண்டுக்கல்லில் இருந்து பிளாஸ்டிக் குடங்களை மொத்தமாக வாங்கி வந்து சுமை ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகிறோம். பெரிய குடம் ஜோடி ரூ.100-க்கும், சிறிய குடம் ஜோடி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 1,000 குடங்கள் வீதம் விற்பனை செய்கிறோம். கோடையில் கூடுதலாக தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டி இருப்பதால் தொலை தூரங்களில் இருந்து இரு சக்கர வாகனங்கள் மூலமோ, தலை சுமையாகவே தண்ணீர் எடுத்துவர வசதியாக இருப்பதால் மக்கள் ஆர்வத்தோடு பிளாஸ்டிக் குடங்களை வாங்குகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x