

கரூர் மாவட்டம் புஞ்சை புகழூர் பேரூராட்சி செம்படாபாளை யத்தைச் சேர்ந்தவர் காந்தி(51). புஞ்சை புகழூர் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர். இவர் நேற்று கரூரில் இருந்து செம்படாபாளையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். நாணப்பரப்பு பிரிவு அருகே சாலையை கடந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த, சேலம் நோக்கிச் சென்ற சரக்கு லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த காந்தி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.