மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு :

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு :
Updated on
1 min read

திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில்,"திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக,குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவுபாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயாளிகள், தொழு நோயாளிகள், பார்கின்சன் நோயாளிகள், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருபவர்கள் அனைவரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தோ அல்லது https://tiruppur.nic.in/ என்ற இணையதளம் வாயிலாகவோ, வாழ்நாள் சான்றுபடிவத்தை பெற்று, அதில் கிராமநிர்வாக அலுவலரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். பி்ன்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்கள் மற்றும்புகைப்படம் 1 உள்ளிட்ட சான்றுகளுடன், மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 0421-2971165 என்ற எண்ணிலும்தொடர்புகொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in