

செஞ்சி வட்டாட்சியராக பணியாற்றுபவர் ராஜன். இவர் நேற்றுகாலை அரசு ஜீப்பில் விழுப்புரத் திலிருந்து செஞ்சிக்கு சென்றார். பாலப்பட்டு கிராமம் அருகே செல் லும்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மணி மேகலை (15) மீது ஜீப் மோதியது.
இதில் படுகாயமடைந்த பள்ளிமாணவி மணிமேகலைக்கு செஞ்சிஅரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார்.
இதுகுறித்து மணிமேகலையின் தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.