Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

கரோனா மருத்துவமனையில் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும்: புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல் :

கரோனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆளுநர் ஆய்வுசெய்ய வேண்டும் என புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலா ளர் அன்பழகன் எம்எல்ஏ வலியு றுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று உள்ள இக்காலத்தில் மக்களின் உயிர் பற்றிகவலைப்படாமல் தங்களது சுய நலத்திற்காக சில அரசியல் கட்சிதலைவர்கள் ஊரடங்கு விஷயத்தில் தவறான கருத்துகளை தெரி வித்து அரசின் நடவடிக்கையை தடுக்கிறார்கள். இதனால் நோய் தொற்று அதிகரிக்கிறது.

இதிலிருந்து மக்களை காப்பாற்ற அரசால் பிறப்பிக்கப் படுகின்ற ஊரடங்கு உத்தரவை எதிர்கொள்ள மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திராகாந்தி அரசு மருத் துவக் கல்லூரியில் போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை. சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லை.

இதுபோன்ற சூழலில் அங்குசேர்க்கப்படும் கரோனா நோயா ளிகள் மனஉளைச்சலுக்கு ஆளா கின்றனர். இதனால் சிகிச்சை மீது நோயாளிகளுக்கு நம்பகத்தன்மை குறைந்து வருகி றது.

கரோனா மருத்துவமனையில் தற்போது அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும். கரோனா இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தை அரசு கட்டுக்குள் கொண்டுவரவில்லை.

மருத்துவமனைக்கு உடல் நலக்குறைவோடு வரும் கரோனா நோயாளிகளுக்கு ஒன்றிரண்டு மாத்திரைகளை கொடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் திருப்பி அனுப் புகிறார்கள்.

அவர்கள் சில தினங்களிலேயே நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைவது மனவேதனை அளிக்கிறது.

300 படுக்கைக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும் அரசு மருத்துவமனையில் 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மருத்துவ விதிப்படி போதிய மருத்துவர்களை நியமிக்காமல் உயிர் பிரச்சினையோடு அரசு விளையாடுகிறது.

கரோனா மருத்துவமனைக்கு ஏற்கெனவே அரசு பணியிலுள்ள தகுதியான மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண் டும்.

அதனால் காலியாக ஏற்படும் மருத்துவ இடங்களுக்கு ஒப்பந்த மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

புதுச்சேரியில் தகுதியான பல நர்சிங் ஹோம்கள் உள்ளன. அவற்றை சுகாதாரத்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு கரோனா சிகிச்சை செய்துகொள்ள அரசு அனுமதி கொடுக்கவேண்டும். தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கான கட்ட ணத்தை அரசே நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x