அரசு பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் :

அரசு பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார்  :
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் உள்ள அரசு தென்னை நாற்றுப் பண்ணையை, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.டாம்.பி.சைலஸ், துணை இயக்குநர் எஸ்.எஸ். சேக் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் எஸ்.டாம் பி சைலஸ் கூறியதாவது:

மாவட்டத்தில் உச்சிப்புளி மற்றும் தேவிபட்டினத்தில் அரசு தென்னை நாற்றுப்பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகள் மூலம் நடப்பாண்டில் 23,500 நெட்டை ரகம், 10,690 நெட்டை மற்றும் குட்டை ரக தென்னங்கன்றுகளை விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரமான தென்னங்கன்றுகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.தற்சமயம் தென்னை நாற்றுப்பண்ணைகளில் 3,100 நெட்டை ரகக் கன்றுகளும், 1,600 நெட்டை மற்றும் குட்டை ரக தென்னங்கன்றுகளும் இருப்பில் உள்ளன. ஒரு நெட்டை ரக தென்னங்கன்றின் விலை ரூ. 50 மற்றும் நெட்டை மற்றும் குட்டை ரக கன்றுகளின் விலை ரூ. 80 எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in