

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரிலுள்ள அரசு கல்லூரியில் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் உத்தரவின்பேரில், இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும்வகையில் நேற்று காவல்துறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.