Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

கரோனா பரவலை கட்டுப்படுத்த ஒருநாள் முழு ஊரடங்கு அமல் - தமிழகம் முழுவதும் வெறிச்சோடிய சாலைகள் : தேவையின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று அமல்படுத்தப்பட்ட ஒருநாள் முழு ஊரடங்கால் முக்கிய சாலைகள் வாகனங்கள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய சாலைகளில் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து, மக்கள் நடமாட் டத்தை கட்டுப்படுத்தினர். தேவை யின்றி வெளியில் சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற் றின் 2-ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 15,659 பேர் புதி தாக தொற்றுக்கு உள்ளாகியுள் ளனர். அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதையடுத்து, கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளது. கடந்த 20-ம் தேதி முதல் தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத் துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு தவிர, மற்று அனைத்து வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடை களும் மூடப்பட்டிருந்தன. மருத் துவமனைகள், மருந்தகங்கள், பால், பத்திரிகை, மின்சாரம் உள் ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

வாகனப் போக்குவரத்து இல்லாததால் மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப் பட்டன. பேருந்து நிலையங்கள், காய்கறி மற்றும் மீன் சந்தைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடின. ரயில்களில் வந்திறங்கிய பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல், அதே ரயில் நிலையங்களில் தங்கினர். சிலர் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் பயணித்தனர்.

ஊரடங்கு அமலில் இருந் தாலும், ஏற்கெனவே முடிவு செய் யப்பட்ட திருமணங்களை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களில் உள்ள மண்டபங்களில் நேற்று திருமணம் நடந்தது. ஆனால், 100 பேருக்குமேல் பங்கேற்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் திருமண விழாக்களில் கூட்டம் குறைவாக இருந்தது.

கடலூர் திருவந்திபுரம் உள்ளிட்ட பல கோயில்களில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடக்கும். ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டதால், பலர் கோயில் வாசல் முன்பு எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். கரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றாத திருமண மண்டபங்களுக்கு உள்ளாட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த மண்டபங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

ஊரடங்கின்போது பொதுமக் கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகரப் பகுதியில் 200 இடங்களிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பல முக்கிய சாலைகள், மேம் பாலங்களில் தடுப்புகள் வைத்து வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

நியாயமான காரணங்கள் இன்றி வெளியில் சுற்றியவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். ஊரடங்கை மீறி சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய் தனர். முகூர்த்த நாள் என்பதால் திருமண அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டும் காலையில் வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

உணவகங்கள் மற்றும் தெரு வோர உணவங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் சுமார் 600-க் கும் மேற்பட்ட அம்மா உணவகங் கள் வழக்கம்போல் செயல்பட் டன. சமையலறை வசதி இல்லாத அறைகளில் வசிக்கும் இளைஞர் கள், ஏழை, எளியோர். சாலை யோரம் வசிப்போர், கூலித் தொழி லாளர்கள் உள்ளிட்டோர் அம்மா உணவகங்களில் உணவருந்தினர். அதிக அளவில் மக்கள் வந்ததால் அம்மா உணவகங்களில் கூடுதலாக உணவு சமைக்கப்பட்டது.

கூடுதல் கட்டுப்பாடுகள்

இதனிடையே, தமிழகம் முழு வதும் இன்றுமுதல் கூடுதல் கட்டுப் பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, திரையரங்குகள், உடற் பயிற்சிக் கூடங்கள், பார்கள், கூட்ட அரங்குகள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. உணவகங்கள், டீக்கடை களில் அமர்ந்து சாப்பிட முடி யாது. பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

அம்மா உணவகங்களில் கூடுதலாக உணவு சமைக்கப்பட்டது. முகூர்த்த நாள் என்பதால் திருமண அழைப்பிதழ் வைத்திருந்தவர்கள் மட்டும் காலையில் வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x