Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

தடுப்பூசி வதந்திகளை நம்ப வேண்டாம் : பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பி ஏமாற வேண் டாம் என்று பொதுமக்களுக்கு பிர தமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி யுள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் பிர தமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றி வருகிறார். இதன்படி 76-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் கரோனா வைரஸ் தொடர்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்களுடன் பிர தமர் கலந்துரையாடினார். அவர் களின் ஆலோசனைகளை கேட் டறிந்தார்.

மும்பையைச் சேர்ந்த மருத்துவர் சஷாங்கிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மருத்துவர் சஷாங்க் கூறும்போது, ‘‘வைர ஸால் பாதிக்கப்பட்ட நோயாளி கள் மிகவும் தாமதமாக மருத்துவ மனைக்கு வருகின்றனர். அவர்கள் முன்கூட்டியே மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். மரபணு மாறிய வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. பிரணா யாமம் செய்தால் சுவாசம் சீராகும்’’ என்று தெரிவித்தார்.

காஷ்மீரின் நகரைச் சேர்ந்த மருத்துவர் நவீத் நசீர் ஷா கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. முகக்கவசம், சமூக இடை வெளியை கடைபிடித்தாலே வைரஸை விரட்டி விடலாம். கரோனா தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப் படுகிறது. எந்தவொரு தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் காய்ச்சல் ஏற்படுவது இயல்பானது. எனவே, கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து பயப்பட வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.

செவிலியரின் அனுபவம்

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப் பூரை சேர்ந்த செவிலியர் பாவனா, பிரதமருடனான கலந்துரையாட லின்போது, ‘‘கடந்த 2 மாதங்களாக கரோனா நோயாளிகளுக்கு சேவை யாற்றி வருகிறேன். கரோனா நோயாளிகள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். முதலில் அவர்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு ‘கவுன்சலிங்' அளிக்கிறோம். அதன் பிறகே சிகிச்சையை தொடங்கு வோம். கரோனா வார்டில் பணி யாற்றும்போது பாதுகாப்பு கவச உடை அணிய வேண்டும். அது கொஞ்சம் சிரமமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

பெங்களூரைச் சேர்ந்த செவி லியர் சுரேகா, ‘‘கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட் டால் உடனடியாக தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத கசாயம் குடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

குணமடைந்த நோயாளி

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரேம் கூறும்போது, ‘‘கரோனா நோயாளி களை ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறேன். இந்த பணியை விட்டுவிடுமாறு எனது தாயார் வலியுறுத்தினார். அவரிடம் நிலைமையை எடுத்துக் கூறி, எனது பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருகிறேன்’’ என்றார்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பிரீத்தி சதுர்வேதி யிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். இறுதியில் பிரதமர் மோடி பேசியதாவது:

விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஆய்வக ஊழியர்கள் உள்ளிட்டோர் அர்ப்பணிப்பு உணர் வுடன் கரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகின்றனர். அவர்களை கடவுளாக போற்றிப் பாராட்ட வேண்டும். தன்னார் வலர்கள் தாங்களாக முன்வந்து மக்களுக்குத் தேவையான உதவி களை செய்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் தடுப்பு நடைமுறைகளை நாம் முறையாக கடைபிடித்தால் நமது கிராமங்களை, நகரங்களை கரோனா பிடியில் இருந்து விடுவிக்க முடியும். ரமலான், புத்த பூர்ணிமா, தாகூர் ஜெயந்தி, குரு தேக் பகதூர் ஜெயந்தி உள்ளிட்ட விழாக்கள் அடுத்தடுத்து வருகின்றன. கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி விழாக் களை கொண்டாட வேண்டும்.

கரோனாவால் நமது அன் புக்கு உரியவர்களை இழந்திருக் கிறோம். இந்த வைரஸ் நமது பொறுமையை, வலிதாங்கும் திறனை சோதிக்கிறது.

கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். விரைவில் கரோனா பேரழிவில் இருந்து மீள்வோம்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

அனைவருக்கும் தடுப்பூசி அவசியம்

முதல் அலையை வெற்றிகரமாக தடுத்துவிட்டோம். எனினும் 2-வது அலை நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது. வைரஸை வீழ்த்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நிபுணர்கள், விஞ்ஞானிகளின் அறிவுரைகளின்படி செயல்பட வேண்டும். மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x