

பொங்கலூர் வட்டார பொது சுகாதாரத் துறை மூலமாக, பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 80 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மாதப்பூர் ஊராட்சித் தலைவர் அசோக்குமார், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுந்தரவேல், மருத்துவர்கள் செந்தில்குமார், சியாமளா கவுரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, கோகுல்ராஜ் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.