

திருப்பூர் ராயபுரம் நேரு நகர் பகுதியில் செயல்படும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் 2 பேர், கணக்காளர் ஒருவர் என 3 ஆண்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா தொற்று உறுதியானது. பாதுகாப்பு கருதி வங்கி மூடப்பட்டது.
இதேபோல, வங்கியில் பணிபுரிந்துவரும் மற்ற 12 ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை வங்கி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கி முன்பு வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.