நாமக்கல்லில் வாரச்சந்தை, தினசரி சந்தை இடமாற்றம் :

நாமக்கல்லில் வாரச்சந்தை, தினசரி சந்தை இடமாற்றம் :

Published on

நாமக்கல்லில் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகள் இடமாற்றம் செய்யப்படுகிறது, என நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே, மக்கள் நலன் கருதி நாளை (26-ம் தேதி) முதல் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் வாரச்சந்தைகள், தினசரி காய்கறிச் சந்தைகள் நல்லிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (வடக்கு) விளையாட்டு மைதானத்திற்கு தற்காலிக மாக இடமாற்றம் செய்யப்படுகிறது.

மறு உத்தரவு வரும் வரை இச்சந்தைகள் இந்த இடங்களில் செயல்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in