

குமாரபாளையம் தினசரி காய்கறிச் சந்தையில் நாளை முதல் 50 சதவீத கடைகள் மட்டும் இயங்கும் என நகராட்சி ஆணையர் ஸ்டாலின்பாபு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (26-ம் தேதி) முதல் தினசரி காய்கறிச் சந்தையில் மொத்த கடைகளில் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 50 சதவீத கடைகள் மட்டுமே செயல்படும்.
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.