கலப்பட சிமெண்ட் தயாரித்த 2 பேர் கைது :

கலப்பட சிமெண்ட் தயாரித்த 2 பேர் கைது :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்காளம்மன் அனெக்ஸ் பகுதியில் உள்ள நாசர் என்பவருக்கு சொந்தமான கிடங்கில், கலப்பட சிமென்ட் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரண்டு லாரிகளில் கலப்பட சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், கலப்பட சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலவை இயந்திரம், 10 சிமென்ட் மூட்டைகள், 2 லாரிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, கிடங்கின் உரிமையாளர் நாசர், ஊழியர் சுரேஷ் குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in