திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்   : புறநோயாளிகள் சிகிச்சை 10 நாள் இல்லை :

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் : புறநோயாளிகள் சிகிச்சை 10 நாள் இல்லை :

Published on

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் ஏதுவாக, சுகாதாரத் துறை செயலாளரின் அறிவுறுத்தலின்படி, வரும் 26-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரையான 10 நாட்களுக்கு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படாது.

ஆகவே புறநோயாளிகள், தங்கள் பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ தங்களை பரிசோதித்து பயன்பெறலாம்.

அதேசமயம், இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவும், மகப்பேறு பிரிவும் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in