

திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்தில் தற்போது சமுதாய நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் மத வழிபாடுகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைப் பேணுதல், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கடைபிடிக்கத் தவறுவதால், கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கரோனா தடுப்பின் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விவரங்கள் பெறவும், புகார்கள் தெரிவிக்கவும் கட்டுப்பாட்டு மையத்தை 0421-1077, 0421-2971199 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களுக்கு தேவைப்படும் விவரங்களை 0421-2971133 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வழிமுறைகளை பின்பற்றி, கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.