

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேகால்வாய் விரிவாக்க பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கிருந்த பழமையான அரசமரத்தை வெட்ட மாநகராட்சி முடிவு செய்திருந்தது.
இதையறிந்த தனியார் அமைப்பினர், அந்த அரச மரத்தை கிரேன் மூலம் வேருடன் பிடுங்கி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மறுநடவு செய்தனர். மரம் வளர்வதற்கு தேவையான இடுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தனியார் அமைப்பினர் தெரிவித்தனர். தனியார் அமைப்பினரின் இந்தநடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.