நெல்லையில் இருளில் மூழ்கியுள்ள தாமிரபரணி படித்துறைகள் : மின் வாரியம் தீர்வு காண கோரிக்கை

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் ஆற்றங்கரையின் அருகே வெள்ளத்தில் சாய்ந்த மின்கம்பம் இதுவரை சீரமைக்கப்படவில்லை.      படங்கள்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி சிந்துபூந்துறையில் ஆற்றங்கரையின் அருகே வெள்ளத்தில் சாய்ந்த மின்கம்பம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. படங்கள்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலியில் தாமிரபரணி படித்துறைகள் இருளில் மூழ்கியிருப்பதால் ஆற்றில் குளிப்பவர்கள் சிரமப்படுகிறார்கள்.

தாமிரபரணியில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல மின்கம்பங்கள் சேதமடைந்தன. இவற்றைசீரமைக்கும் பணிகளில் மின்வாரியம் துரிதகதியில் செயல்பட்டது. ஆற்றங்கரையோர பகுதிகளில் பெரும்பாலான மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, மின்விளக்குகள் எரிய வைக்கப்பட்டன.

ஆனால், திருநெல்வேலி சிந்துபூந்துறையில் ஆற்றங்கரை அருகே வெள்ளத்தில் சாய்ந்த மின்கம்பம் சீரமைக்கப்படவில்லை. அது இப்போதும் காட்சிப் பொருளாக காணப்படுகிறது. அதன் அருகிலுள்ள சிறிய மின்கம்பம் சீரமைக்கப்பட்டு மின் விளக்கு எரிய வைக்கப்பட்டுள்ளது. பெரிய மின்கம்பம் சீரமைக்கப்படாமல் இருப்பதால் ஆற்றங்கரையில் இரவில் இருள் சூழ்ந்திருக்கிறது.

இப்பகுதியின் எதிர்புறம் வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகேயுள்ள படித்துறை மற்றும் அதையொட்டிய பகுதிகள் இருளில் மூழ்கியிருக்கின்றன.

இங்குள்ள மின்கம்பத்தில் இருக்கும் மின்விளக்கு புதர்கள் மண்டியிருக்கும் பகுதியை நோக்கி திருப்பி வைக்கப்பட்டிருப்பதால் படித்துறையில் பொதுமக்கள் வந்துகுளிக்கும் பகுதிக்கு வெளிச்சம் தெரியவில்லை.

படித்துறைகளில் வெளிச்சம் இல்லாததால் இரவு 7 மணிக்கு பின்னர் ஆற்றில் குளிக்க வரும் தொழிலாளர்கள் பலரும் சிரமப்படுகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள்கவனம் செலுத்தி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in