Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
கரோனா தொற்று இல்லாத வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி அளிக்கப்படும் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரி வித்தார்.
புதுக்கோட்டை அரசு பிற்படுத் தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை நேற்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறி யது: புதுக்கோட்டை மாவட்டத் தில் கரோனா தொற்று விகிதம் 3.7 சதவீதமாக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. கரோனா தொற்றா ளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டத்தில் 1,529 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
மேலும், புதுக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி,100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதேபோல, அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தபின், மீண்டும் அங்கு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர், முகவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக் கும் நாளை(ஏப்.24) கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் ஏப். 28-ம் தேதி முதல் ஏப்.30-ம் தேதி வரை ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில், கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், கோட்டாட்சியர் டெய்சிகுமார், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT