

திருப்பூர் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும், திருப்பூர் குமரன் சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் போன்ற பகுதிகள், நேற்று முன்தினம் இரவு கரோனா ஊரடங்கால், வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
மாநகரின் ஒரு சில பகுதிகளில், ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 15 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.போக்குவரத்தை தடை செய்யும் வகையில் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டன.
ரயில்கள் மூலம் திருப்பூருக்கு இரவு 10 மணிக்கு மேல் வந்தவர்கள், பேருந்து வசதி இல்லாததால், ரயில் நிலைய வளாகத்தில் தூங்கிவிட்டு, நேற்று காலை அவரவர் பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.