

தென்மண்டல அனைத்து கலை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் திருநெல்வேலி மாவட்ட கரகாட்ட கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். கலை நிகழ்ச்சிகள் மூலம் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் வருமானம் கிடைக்கும். தற்போது கரோனா தடைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கிராம கோயில்களில் திருவிழா, கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கரகாட்ட கலைஞர்கள் வண்ணார்பேட்டையிலிருந்து கொக்கிரகுளத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்துக்கு கரகம் ஆடிவந்தனர்.
அவர்கள் கூறும்போது, “ வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கரோனா நிவாரணமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். இல்லையெனில் ஊர் ஊராகச் சென்று கரகாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பணம் வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்றனர்.
பந்தல் தொழிலாளர்கள்