

இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.செந்தில்குமார், திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், "திருப்பூர் எஸ்.ஆர்.நகர் இந்தியன் வங்கி கிளை முதன்மை மேலாளராக தண்டபாணி பணிபுரிந்து வந்தார். அவரது வங்கிக் கிளையில் தணிக்கை செய்தபோது, கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக பணம் கையாடல் நடைபெற்றுள்ளது தெரியவந்தது.
பொதுமக்கள் வைப்பு நிதியாக செலுத்திய தொகையை வைப்பு நிதி காலம் முடிந்தவுடன் எடுக்க சென்றபோது, அவர்களுடைய பணத்தின் வைப்பு நிதியின் மேல் வாடிக்கையாளர்கள் கடன்வாங்கி யிருப்பதுபோல கணக்கு எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில்வங்கியில் நடந்த தணிக்கையில் ரூ.1 கோடியே 80 லட்சம் பணத்தை, கிளையின் முதன்மை மேலாளர் தண்டபாணி கையாடல் செய்துள்ளார் என புகார் அளிக்கப்பட்டிருந்தது. தண்டபாணி மீது வழக்கு பதிந்து, மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் க.பாலமுருகன் மேற்பார்வையிலும், காவல் ஆய்வாளர் முனியம்மாள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டது. வங்கி ஆவணங்கள்,பண பரிவர்த்தனைகளை பார்வையிட்டும், வாடிக்கையாளர்களிடம்இருந்து பெறப்பட்ட வாக்குமூலங் களில் இருந்தும், அவர்கள் மூலம் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்தும் கோடிக்கணக்கில் கையாடல் செய்தது உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து, கோவை நஞ்சுண்டாபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தி.தண்டபாணியை (59), திருப்பூர் மாநகர்மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் நேற்று கைது செய்து, திருப்பூர் குற்றவியல் நீதித்துறைநடுவர் எண்: 2 நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். 15 நாட்கள் திருப்பூர்சிறையில் அடைக்கப்பட்டார்.