

வட மாநிலங்களில் கரோனா ஊரடங்கு காரணமாக, பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்து பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவை போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பின்னலாடை சரக்குகளை அனுப்ப பலரும் திருப்பூர் ரயில் நிலையத்தில் புக்கிங் செய்து வருவதால், ரயில் நிலையத்தில் பின்னலாடை சரக்குகள் குவிந்து வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக ரயில் மூலமாக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொருவரின் பதிவுக்கு ஏற்ப, அந்தந்த பகுதிகளுக்கு சரக்குகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட நேரத்துக்குள் சரக்குகள் சென்றடையாவிட்டால், ஆர்டர்கள் ரத்தாகும். எனவே, முன்னெச்சரிக்கையாக தொழில் துறையினர் ஆடைகளை அனுப்பி வருகிறார்கள்.