கொள்ளை அடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 4 இளைஞர்கள் கைது :

கொள்ளை அடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 4 இளைஞர்கள் கைது :
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே வலசைவெட்டிக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மணவாளநகர் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 5 இளைஞர்கள், போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.இதையடுத்து, அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றதில், 2 இளைஞர்கள் சிக்கினர். மற்ற 3 பேர் தப்பியோடினர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர்கள் திருவள்ளூர், பெரியகுப்பத்தைச் சேர்ந்த ஸ்டீபன்(21), அன்சார் ஷெரீப்(22)என்பதும், அவர்கள் தங்கள் நண்பர்களான பாக்குப்பேட்டையை சேர்ந்த விக்கி, ராஜேஷ் மற்றும் போளிவாக்கத்தைச் சேர்ந்த அசோக் ஆகியோருடன் திருவள்ளூர் பகுதிகளில் உள்ளவீடுகள், கடைகளில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மணவாளநகர் போலீஸார், ஸ்டீபன், அன்சார் ஷெரீப் ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பியோடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அப்போது, புதுவாயல் சப்வே பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை போலீஸார் மடக்கி விசாரணை செய்தனர்.

அவர்கள் சோழவரம் அருகே உள்ள பாலவாயல், கவரப்பேட்டை அடுத்த பன்பாக்கத்தைச் சேர்ந்தபிரகாஷ் (22), எம்ரோஸ் (25) என்பதும், புதுவாயல் பகுதியில்செல்லும் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடிக்கும் நோக்கில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கவரப்பேட்டை போலீஸார் பிரகாஷ், எம்ரோஸ் ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in