Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

நெல்லை மாவட்டத்தில் 256 பேருக்கு கரோனா :

திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். படம்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 256 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு நேற்று உறுதியானது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 161 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 95 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வெளிப்புறப் பகுதிகள் முழுவதும் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் அரசு மருத்துவ மனை வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது. மேலும் அரசு மருத்துவமனை அருகே கடைகளுக்குமுன் சமூக இடைவெளிக்கான வட்டம் வரையப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 225 ஆக அதிகரி த்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 105 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறிய ப்பட்டது. 29 பேர் குணமடைந்து வீடு களுக்கு திரும்பினர். 903 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளி லும் சிகிச்சை பெறுகிறார்கள்.

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் நேற்று 200-க்கும் மேற்பட்டோர் கரோனா வினால் பாதிக்கப்பட்டனர். 2 பேர் மரணமடைந்தனர். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,803-ஆக அதிகரி த்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 170 பேரு க்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தற்போது மாவட்டத்தில் 2007 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x